தேசிய அளவிலான ஜூடோ போட்டிக்கு அரசு கல்லூரி மாணவி தேர்வு

தேசிய அளவிலான ஜூடோ போட்டிக்கு அரசு கல்லூரி மாணவி தேர்வு செய்யப்பட்டார்.
தேசிய அளவிலான ஜூடோ போட்டிக்கு அரசு கல்லூரி மாணவி தேர்வு
Published on

தமிழ்நாடு ஜூடோ சங்கம் சார்பில் திருப்பூரில் ஜூடோ போட்டி நடைபெற்றது. இதில், 70 கிலோ எடை பிரிவில் கரூர் அரசு கலைக்கல்லூரி மாணவி தீபா கலந்து கொண்டு தங்கப்பதக்கம் பெற்றார். இதையடுத்து மாணவி தீபா ஹரியானாவில் நடைபெறும் தேசிய அளவிலான ஜூடோ போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து தேசிய போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவி தீபாவை கல்லூரி முதல்வர் கவுசல்யா தேவி, உடற்கல்வி இயக்குனர் ராஜேந்திரன், கல்லூரி பேராசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com