அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவில்பட்டியில் அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா
Published on

கோவில்பட்டி:

கோவில்பட்டி இல்லத்தார் நடுநிலைப்பள்ளியில் நாராயண குரு கல்வி வளர்ச்சி குழுவின் சார்பில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 வகுப்பு அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு இல்லத்தார் சமுதாய சங்க தலைவர் சங்கரன் தலைமை தாங்கினார். ஸ்ரீ நாராயண குரு கல்வி வளர்ச்சி குழு பொருளாளர் மாரிக்கண்ணன் முன்னிலை வகித்தார். செயலாளர் சங்கர் வரவேற்று பேசினார். கோவில்பட்டி நாடார் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் ஜான் கணேஷ், இளையரசனேந்தல் அரசு மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியை முருக சரஸ்வதி, பொதுநல மருத்துவமனை மருத்துவர் வேலம்மாள், துணை தாசில்தார் பொன்னம்மாள், பாரதியார் அறக்கட்டளை தலைவர் முத்துமுருகன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசினர்.

நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் பாரதி, நிர்மலா, சித்ரா, கலைஸ்ரீ நாராயண குரு கல்வி வளர்ச்சி குழு நிர்வாகிகள் வெங்கடேஸ்வரன், கோமதி சங்கர், ஜெயக்குமார், கோபாலகிருஷ்ணன், தினேஷ் பாலாஜி மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஸ்ரீ நாராயண குரு கல்வி வளர்ச்சிக்குழு ஆலோசகர் திருப்பதி கணேசன் நன்றி கூறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com