அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் - டிடிவி தினகரன் வலியுறுத்தல்

அரசு மருத்துவர்களை அழைத்துப் பேசி, அவர்களது நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்றித்தர வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் - டிடிவி தினகரன் வலியுறுத்தல்
Published on

சென்னை,

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

"அரசு மருத்துவர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வில் நடந்த முறைகேடுகளால் பாதிக்கப்பட்டுள்ள மருத்துவர்களுக்கு நீதி வழங்கவும் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு முதலமைச்சர் ஸ்டாலின் அளித்த வாக்குறுதிப்படி., அரசாணை 354-ன் கீழ் 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை (Pay Scale) 4-ஐ வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் சென்னையில் குடும்பத்துடன் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

கொரோனா காலத்தில் தங்களின் உயிரைப் பணயம் வைத்து சேவை செய்த அரசு மருத்துவர்களை இப்படி ஊதிய உயர்வுக்காகவும் நியாயமான கோரிக்கைக்காகவும் போராட வைப்பது தமிழக அரசுக்கு அவமானமாக தெரியவில்லையா? உடனடியாக அரசு மருத்துவர்களை அழைத்துப் பேசி, அவர்களது நியாயமான கோரிக்கைகளை தி.மு.க அரசு நிறைவேற்றித்தர வேண்டும் என வலியுறுத்துகிறேன்" என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com