

திருவரங்குளம் அருகே உள்ள வேப்பங்குடி ஊராட்சியை சேர்ந்த நம்பட்டி அரசு ஆரம்ப பள்ளிக்கு பொதுமக்கள் சார்பில் கல்விச்சீர் வழங்கும் விழா நடைபெற்றது. அப்போது தொலைக்காட்சி பெட்டி, தண்ணீர் டிரம், கல்வி உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்களை ஊர்வலமாக எடுத்து சென்று பள்ளி தலைமை ஆசிரியரிடம் வழங்கினர். விழாவில் ஊராட்சி மன்ற தலைவர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர், உள்ளாட்சி பிரதிநிதிகள், நேதாஜி இளைஞர் மன்றத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.