நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

விபத்தில் பலியான சிறுவனின் குடும்பத்துக்கு நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
Published on

திண்டிவனம்:

திண்டிவனம் அருகே உள்ள நல்லாவூர் கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் வல்லரசு(வயது 14). 10-ம் வகுப்பு மாணவனான இவன், நல்லாவூரில் இருந்து புதுகுப்பம் அரசு பள்ளிக்கு செல்ல அரசு பஸ்சில் பயணம் செய்தான். அப்போது டிரைவர் பிரேக் போட்டதால் வல்லரசு கீழே விழுந்து இறந்தான். இதில் பாதிக்கப்பட்ட பெற்றோர், நஷ்டஈடு கேட்டு திண்டிவனம் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்து, சிறுவனின் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் ரூ.11 லட்சத்து 63 ஆயிரத்து 932 வழங்க நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் குறிப்பிட்ட காலத்திற்குள் நஷ்டஈடு தொகை வழங்காததால் நீதிபதி சுதா உத்தரவின்படி திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் வந்த அரசு பஸ்சை கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்து, கோர்ட்டில் ஒப்படைத்தனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com