ஆன்லைன் சூதாட்ட தடை அவசர சட்டத்தை அரசு பிறப்பிக்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்

ஆன்லைன் சூதாட்ட தடை அவசர சட்டத்தை அரசு பிறப்பிக்க வேண்டும் என டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
ஆன்லைன் சூதாட்ட தடை அவசர சட்டத்தை அரசு பிறப்பிக்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்
Published on

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தன்னுடைய 'டுவிட்டர்' பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த கூட்டத்தில் ஆக்கப்பூர்வமான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறேன்; எடுக்கப்படும் என்று நம்புகிறேன்.

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் விஷயத்தில் வல்லுனர் குழு அமைந்து பரிந்துரை பெறுதல், பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு, சூதாட்ட நிறுவனங்களுடன் கலந்தாய்வு என தேவைக்கும் அதிகமாகவே தமிழ்நாடு அரசு முன்தேவை நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது.

அடுத்தக்கட்ட நடவடிக்கை ஆன்லைன் சூதாட்டத் தடையாகத் தான் இருக்க வேண்டும். எனவே, அமைச்சரவையில் ஒப்புதல் அளித்து ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்தை அரசு பிறப்பிக்க வேண்டும்; ஆன்லைன் சூதாட்ட அரக்கனுக்கு உடனே முடிவுரை எழுதப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com