அரசு உயர்நிலைப்பள்ளியை தரம் உயர்த்த வேண்டும்

மூக்காச்சித்தெரு அரசு உயர்நிலைப்பள்ளியை தரம் உயர்த்த வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசு உயர்நிலைப்பள்ளியை தரம் உயர்த்த வேண்டும்
Published on

வேதாரண்யம்:

வேதாரண்யம் அருகே நாலுவேதபதி ஊராட்சியில் அமைந்துள்ளது மூக்காச்சித்தெரு. இந்த பகுதியில் அரசு உயாநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை சுமார் 200 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு 10-ம் வகுப்பு பயின்று தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மேல் படிப்பு பயில அருகில் உள்ள வெள்ளப்பள்ளம், செம்போடை, வேதாரண்யம், புஷ்பவனம் ஆகிய பகுதிகளுக்கு செல்ல வேண்டி உள்ளது. இதனால் மாணவாகளும், மாணவிகளும் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் மாணவ, மாணவிகளின் நலன் கருதி மூக்காச்சித்தெருவில் உள்ள உயாநிலைப்பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com