டாஸ்மாக் பணியாளர்களுடன் அரசு இன்று பேச்சுவார்த்தை

கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்த இருந்த நிலையில் டாஸ்மாக் பணியாளர்களுடன் அரசு இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறது.
டாஸ்மாக் பணியாளர்களுடன் அரசு இன்று பேச்சுவார்த்தை
Published on

சென்னை,

மதுபான வணிகம் வெளிப்படைத்தன்மையுடன் நடக்க வேண்டும் என்பதற்காக விதிமுறைகள் உருவாக்க வேண்டும், டாஸ்மாக் பணியாளர்கள் மீது வழக்கு பதிவு செய்வது நிறுத்தப்பட வேண்டும், மது கூட உரிமையாளர்கள் தலையீடு காரணமாக நடைபெறும் தவறுகளை நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் சார்பில் வருகிற 16-ந் தேதி சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது

மேலும் அங்கிருந்து பேரணியாக தலைமைச்செயலகம் சென்று முதல்-அமைச்சரிடம் கோரிக்கை மனு அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது

இதற்கிடையில் கோரிக்கைகள் குறித்த பேச்சுவார்த்தையில் பங்கேற்குமாறு டாஸ்மாக் பணியாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தலைவர் நா.பெரியசாமி, பொதுச்செயலாளர் த.தனசேகரன் உள்பட நிர்வாகிகளை இன்று டாஸ்மாக் தலைமை அலுவலகத்துக்கு பேச்சுவார்த்தைக்கு வருமாறு டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த பேச்சுவார்த்தையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com