பட்டதாரி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

வேலை கிடைக்காத விரக்தியில் பட்டதாரி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பட்டதாரி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

வேலூர் கமலாட்சிபுரம் ராமசாமி பிள்ளை தெருவை சேர்ந்தவர் கவுரி (வயது 53). இவரது கணவர் ருத்திரப்பன். ஒரு ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களது மகன் சதீஷ் (31). வேலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. படித்து விட்டு கிடைக்கும் வேலைகளை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் படிப்புக்கு ஏற்ற வேலையை கடந்த 6 மாதமாக தேடி வந்துள்ளார். ஆனால் அவருக்கு வேலை கிடைக்கவில்லை. இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை காலை 10 மணி அளவில் கவுரி, மகன் சதீஷை எழுப்ப அவரது அறைக்கு சென்றார். அப்போது அங்கு அவர் தூக்கில் பிணமாக தொங்கினார். இதைப்பார்த்த அவர் கதறி அழுதார்.

இதுகுறித்து பாகாயம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com