

சென்னை,
அரசு மேல்நிலைப்பள்ளிகளில் வேளாண் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் ஜெயக்குமார் அனுப்பிய சுற்றறிக்கையில் காலிப்பணிடங்கள் குறித்த விவரங்களை அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வுகள் நவம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில், அடுத்த கட்டமாக வேளாண் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்திற்கான போட்டித் தேர்வு அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.