அரசு மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

நிலக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது.
அரசு மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
Published on

நிலக்கோட்டையில் உள்ள அரசு மகளிர் கல்லூரியில் 18-வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இதற்கு கல்லூரி முதல்வர் லதாபூரணம் தலைமை தாங்கினார். கல்லூரி வேதியியல் பேராசிரியரும், முன்னாள் மாணவிகள் சங்க பேரவை செயலாளருமான ஜெயபிரதா வரவேற்றார். விழாவில் சிறப்பு விருந்தினராக கொடைக்கானல் அன்னைதெரசா மகளிர் பல்கலைக்கழக துணைவேந்தர் கலா கலந்துகொண்டு மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். அதில் இளங்கலை பட்டப்படிப்பு படித்த 479 மாணவிகளுக்கும், முதுகலை பட்டப் படிப்பு படித்த 221 மாணவிகளுக்கும் என மொத்தம் 700 மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது. விழாவில் துணைவேந்தர் பேசுகையில், மாணவிகள் வாய்ப்புக்காக காத்திருக்க கூடாது. வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கு இலக்கினை அடைய விடாமுயற்சியும், உழைப்பும், புத்தகம் வாசிப்பும் கண்டிப்பாக இருக்க வேண்டும், சிறுதானிய ஆண்டில் அனைவரும் சிறுதானியங்கள் பயன் அறிந்து அதனை பயன்படுத்த வேண்டும் என்றார். விழாவில் பேரவை தலைவி பிரியதர்ஷினி தலைமையில் மாணவிகள் உறுதிமொழி ஏற்றனர். விழாவில் பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், அலுவலர்கள் பெற்றோர்கள், மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com