அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பட்டமளிப்பு விழா

கடையநல்லூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பட்டமளிப்பு விழா நடந்தது.
அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பட்டமளிப்பு விழா
Published on

கடையநல்லூர்:

கடையநல்லூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவிற்கு அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் மீனாட்சி தலைமை தாங்கினார். கடையநல்லூர் நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் முன்னிலை வகித்தார். உதவி பயிற்சி அலுவலர் சேகர் வரவேற்றார்.

விழாவில் தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான செல்லத்துரை பங்கேற்று மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். விழாவில் ஒன்றிய செயலாளர் சுரேஷ், யூனியன் தலைவர் சுப்பம்மாள், துணைத்தலைவர் ஐவேந்திரன் தினேஷ், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் முருகன், திரிகூடபுரம் பஞ்சாயத்து துணைத் தலைவர் மீரான் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஜெயக்குமார் நன்றி கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com