விவசாயிகளுக்கு தானிய மதிப்பு கூட்டுதல் பயிற்சி

தோட்டக்கலைத்துறை சார்பில் விவசாயிகளுக்கு தானிய மதிப்பு கூட்டுதல் பயிற்சி அளிக்கப்பட்டது.
விவசாயிகளுக்கு தானிய மதிப்பு கூட்டுதல் பயிற்சி
Published on

கோத்தகிரி

கோத்தகிரி வட்டார தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு உள் மாநில அளவிலான சிறுதானிய பயிர்களில் மதிப்பு கூட்டுதல் குறித்த பயிற்சி கண்டுணர் சுற்றுலா கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. பயிற்சியில் பழங்குடியின மக்களின் பாரம்பரிய சிறுதானிய பயிர்களான திணை, சாமை, கேழ்வரகு முதலியவற்றை இயற்கை முறையில் சாகுபடி செய்யும் தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கப்பட்டது. மேலும் திணை, சாமை உள்ளிட்ட தானிய வகைகளின் மதிப்பு கூட்டுதல் குறித்த செயல்முறை விளக்கங்கள் அளிக்கப்பட்டது. இதேபோல இயற்கை முறையில் காபி சாகுபடி மற்றும் தேனீ வளர்ப்பு முறைகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் கோத்தகிரி அருகே உள்ள கடினமாலா, அரக்கோடு பகுதியை சார்ந்த பழங்குடியின விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com