தமிழகம் முழுவதும் மார்ச் 22ல் கிராம சபை கூட்டம்

உலக தண்ணீர் தினமான மார்ச் 22-ம் தேதி கிராம சபைக் கூட்டம் நடத்த தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை,
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் மார்ச் 22ல் கிராம சபை கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மார்ச் 22 உலக தண்ணீர் தினத்தன்று நடக்க உள்ள கிராம சபை கூட்டத்தில், மழை நீரை சேகரித்தல், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துதல் தொடர்பாக விவாதிக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும் நீர் நிலைகளில் ஆக்கிரமிப்பை அகற்றுதல் குறித்தும் விவாதித்து தீர்மானம் நிறைவேற்றி செயல்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும் இடத்தை முன்கூட்டியே ஊரகப் பொதுமக்களுக்கு தெரியப்படுத்திட வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story