121 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
121 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்
Published on

மகாத்மா காந்தியின் பிறந்த நாளையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் 121 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது. பெரம்பலூர் மாவட்டத்தில், ஆலத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கொளத்தூர் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கற்பகம் கலந்து கொண்டார். மாவட்டத்தில் மற்ற கிராம ஊராட்சிகளில் அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்தின் தொடக்கத்தில், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கிராம சபை கூட்டம் தொடர்பாக பொதுமக்களுக்காக உரையாற்றிய காணொலி காட்சி ஒளிப்பரப்பு செய்யப்பட்டது.

மேலும் கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை இயக்குனரிடம் இருந்து வரப்பெற்ற கூட்டப் பொருட்கள் மற்றும் இதர கூட்டப் பொருட்கள் விவாதிக்கப்பட்டது. கிராம ஊராட்சி, நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் மற்றும் திட்டப் பணிகள் குறித்தும், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை உள்ளிட்டவை குறித்தும், பல்வேறு அரசுத்துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்தும், அதன் மூலம் பயன் பெறுவது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com