சுதந்திர தினத்தையொட்டி அனைத்து ஊராட்சிகளிலும் 15-ந் தேதி கிராம சபை கூட்டம் - திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் தகவல்

திருவள்ளூர் மாவட்ட அனைத்து ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் சுதந்திர தினத்தையொட்டி 15-ந் தேதி கிராம சபை கூட்டம் காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது.
சுதந்திர தினத்தையொட்டி அனைத்து ஊராட்சிகளிலும் 15-ந் தேதி கிராம சபை கூட்டம் - திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் தகவல்
Published on

இந்த கூட்டத்தில் சுதந்திர தின அறிவிப்பினை முன்னிட்டு கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல், தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், தூய்மை பாரத இயக்கம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு, ஜல்ஜீவன் இயக்கம், மாற்று திறனாளிகளுக்கான கணக்கெடுப்பு திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் இதர பொருள்கள் ஆகிய பொருட்கள் குறித்து விவாதிக்கப்படும்.

கிராம சபை கூட்டங்களில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து வாக்காளர்களும் கலந்து கொள்வது முக்கிய கடமையாகும். மேலும் கிராம சபை விவாதங்களில் பங்கேற்று பயனாளிகள் தேர்வு மற்றும் அரசால் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொள்ளும் பொழுது உரிய கொரோனா தடுப்பு அரசு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர். ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com