

சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
வருகிற 26-ந் தேதி குடியரசு தினத்தன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடத்தப்பட வேண்டும். கிராமசபை கூட்டத்தினை ஊராட்சியின் எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி காலை 11 மணிக்கு நடத்த வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், அனைத்து கிராம மக்களும் ஆர்வத்துடன் எதிர்வரும் கிராமசபை கூட்டத்தில் கலந்துகொள்ள ஏதுவாக கிராமசபை கூட்டம் நடைபெறவுள்ள இடம், நேரம் ஆகியவற்றை கிராம மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
கிராமசபை கூட்டங்கள் மதச்சார்புள்ள வளாகத்தில் நடத்திடக்கூடாது. கிராமசபை கூட்டங்கள் நடைபெறும் இடத்தை முன்கூட்டியே ஊரக பொதுமக்களுக்கு தெரியப்படுத்திட வேண்டும். கிராமசபை கூட்டத்திற்கான செலவின வரம்பு ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்பட்டு ஆணையிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.