பிரமாண்ட பேரணி: முதல்-அமைச்சருக்கு, கவர்னர் நன்றி

இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக முதல்-அமைச்சர் தலைமையில் சென்னையில் பிரமாண்ட மக்கள் பேரணி நடைபெற்றது.
பிரமாண்ட பேரணி: முதல்-அமைச்சருக்கு, கவர்னர் நன்றி
Published on

சென்னை,

கவர்னர் ஆர்.என்.ரவி, கவர்னர் மாளிகையின் எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

பாகிஸ்தானின் ராணுவ ஆக்கிரமிப்பு செயல்களுக்கு எதிராக நாட்டை துணிச்சலுடனும், வெற்றிகரமாகவும் பாதுகாக்கும் இந்திய ஆயுதப் படைகளுடன் நமது 8 கோடி தமிழ்நாட்டு மக்களின் தெளிவான ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் பிரமாண்டமான மக்கள் பேரணியை நடத்தியதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மனமார்ந்த நன்றிகள்.

நமது ஆயுதப் படைகளுடன் நமது தேசம் ஒற்றுமையாகவும் உறுதியாகவும் துணைநிற்பது, பயங்கரவாதத்தின் அனைத்து முனைகளையும் அழித்தொழித்து நமது தேசிய இறையாண்மையைப் பாதுகாப்பதற்கான நமது ஈடுபாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com