கிணற்றில் விழுந்து மூதாட்டி தற்கொலை

வடக்கு விஜயநாராயணம் அருகே கிணற்றில் விழுந்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
கிணற்றில் விழுந்து மூதாட்டி தற்கொலை
Published on

இட்டமொழி:

வடக்கு விஜயநாராயணம் அருகே உள்ள கீழ பண்டாரபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி மனைவி ராமக்கனி (வயது 80). உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த ராமக்கனி நேற்று ஊருக்கு அருகே உள்ள கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றிய தகவல் அறிந்த வடக்கு விஜயநாராயணம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அவரது உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com