வாகனம் மோதி மூதாட்டி சாவு

சூளகிரி அருகே வாகனம் மோதி மூதாட்டி இறந்தார்.
வாகனம் மோதி மூதாட்டி சாவு
Published on

சூளகிரி

சூளகிரி அருகே சென்னப்பள்ளியை சேர்ந்தவர் வெங்கடம்மாள் (வயது 80). சம்பவத்தன்று இவர், சுண்டகிரி பஸ் நிறுத்தம் அருகில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மூதாட்டி மீது மோதி விட்டு சென்றது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com