தூத்துக்குடியில் பாட்டியை அரிவாளால் வெட்டிய பேரன் கைது

தூத்துக்குடியில் வாலிபர் ஒருவர், மது குடிப்பதற்கு பணம் கொடுக்க மறுத்ததால், ஆத்திரத்தில் தனது பாட்டியை சரமாரியாக அரிவாளால் வெட்டினார்.
தூத்துக்குடியில் பாட்டியை அரிவாளால் வெட்டிய பேரன் கைது
Published on

தூத்துக்குடி போல்பேட்டை டி.எம்.சி. காலனியைச் சேர்ந்த சுடலைமணி மகன் மாரிமுத்து (வயது 23). இவர் தனது பாட்டியான கருப்பாயி அம்மாள்(62) என்பவரிடம் மது குடிப்பதற்கு பணம் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு அவர் பணம் கொடுக்க மறுத்ததால் ஆத்திரத்தில் அவரை, மாரிமுத்து சரமாரியாக அரிவாளால் வெட்டினார்.

இதில் பலத்த காயம் அடைந்த கருப்பாயி அம்மாள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து வடபாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜேசு ராஜசேகரன், கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து மாரிமுத்துவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com