சொத்து தகராறில் தாத்தாவை அடித்துக் கொன்ற பேரன்

சொத்து தகராறில் தாத்தாவை அடித்துக் கொன்ற பேரனை போலீசார் தேடி வருகின்றனர்.
சொத்து தகராறில் தாத்தாவை அடித்துக் கொன்ற பேரன்
Published on

வி.கைகாட்டி:

சொத்து தகராறு

அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டியை அடுத்த அயன் ஆத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னப்பிள்ளை (வயது 86). விவசாயியான இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், சின்னப்பிள்ளை பெயரில் உள்ள சொத்துகளை பிரித்து தரக்கோரி குடும்பத்தில் அவ்வப்போது பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் சின்னப்பிள்ளையின் மூத்த மகனான கோவிந்தசாமியின் மகன் இளவரசன்(30), சொத்துகளை பிரித்து தரக்கோரி தாத்தா சின்னப்பிள்ளையிடம் அவ்வப்போது தகராறில் ஈடுபட்டு வந்தார்.

கொலை

இந்நிலையில் கடந்த 18-ந் தேதி இரவு சின்னப்பிள்ளையிடம் இளவரசன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது சின்னப்பிள்ளையை கீழே தள்ளி தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் தலையில் பலத்த காயமடைந்த சின்னப்பிள்ளை பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து இளவரசன் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

வலைவீச்சு

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த கயர்லாபாத் போலீசார் அங்கு சென்று சின்னப்பிள்ளையின் உடலை கைப்பற்றி அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள இளவரசனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com