ஓய்வு பெற்ற கோவில் பணியாளர்களுக்கு பணிக்கொடை - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

பணிக்காலத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சத்திற்கான காசோலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
ஓய்வு பெற்ற கோவில் பணியாளர்களுக்கு பணிக்கொடை - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

இந்து சமய அறநிலையத் துறை சார்பில் திருத்தணி, சுப்பிரமணியசுவாமி கோவிலில் பணியாற்றி ஓய்வு பெற்ற 69 கோவில் பணியாளர்கள் மற்றும் உயிரிழந்த கோவில் பணியாளர் ஒருவரின் வாரிசுதாரருக்கு பணிக்கொடை வழங்க உத்தரவிடப்பட்டிருந்தது.

அதன் ஒரு பகுதியாக 12 ஓய்வு பெற்ற திருக்கோவில் பணியாளர்கள் மற்றும் வாரிசுதாரர்களுக்கு ரூ.2.70கோடி பணிக்கொடை வழங்கிடும் நிகழ்ச்சியில் முதல்-அமச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பணிக்கொடையினை வழங்கினார்.

மேலும், மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில், வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவில் மற்றும் மாமல்லபுரம் ஆளவந்தார் அறக்கட்டளை ஆகியவற்றில் பணியாற்றி, பணிக்காலத்தில் இறந்த 3 கோவில் பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு குடும்பநல நிதியாக தலா ரூ.3 லட்சத்துக்கான காசோலை ஆகியவற்றையும் அவர் வழங்கினார்.

இந்த நிகழ்வின்போது, சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com