சரள் மண் அள்ளிய லாரி, பொக்லைன் எந்திரம் பறிமுதல்

சரள் மண் அள்ளிய லாரி, பொக்லைன் எந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது.
சரள் மண் அள்ளிய லாரி, பொக்லைன் எந்திரம் பறிமுதல்
Published on

பாளையங்கோட்டை பெருமாள்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது டக்கரம்மாள்புரம்- ரெட்டியார்பட்டி ரோட்டில் உள்ள ஒரு குளத்தில் சிலர் மண் அள்ளுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அப்போது அங்கு பொக்லைன் எந்திரம் மூலம் லாரியில் சரள் மண் அள்ளிக்கொண்டு இருந்தவர்கள் போலீசாரை பார்த்ததும் தப்பிச்சென்றனர். அவர்கள் விட்டுச்சென்ற லாரி, பொக்லைன் மற்றும் 3 யூனிட் சரள் மண் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பிச்சென்ற லாரி டிரைவர், பொக்லைன் ஆபரேட்டர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com