சரள் மண் கடத்தியவர் கைது

வீரவநல்லூர் அருகே டிராக்டரில் சரள் மண் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
சரள் மண் கடத்தியவர் கைது
Published on

சேரன்மாதேவி:

வீரவநல்லூரை அடுத்த உப்புவாணிய முத்தூர் பஸ் நிறுத்தம் அருகே வீரவநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் காவுராஜன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வீரவநல்லூர் வடக்கு மேட்டு தெருவை சேர்ந்த சந்தனகுமார் (வயது 34) என்பவர் ஓட்டி வந்த டிராக்டரை நிறுத்தி சோதனை செய்தபோது, சரள் மண் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து சந்தனகுமாரை போலீசார் கைது செய்தனர். மேலும் சரள் மண்ணுடன் டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com