கிராவல் மண் கடத்தும் மர்ம நபர்கள்

மணிமுக்தா அணையில் இருந்து கிராவல் மண் கடத்தும் மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டரிடம் கிராமமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
கிராவல் மண் கடத்தும் மர்ம நபர்கள்
Published on

கள்ளக்குறிச்சி அருகே உள்ள அகரக்கோட்டாலம் கிராமத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு கொடுத்துள்ளனர். அதில் மணிமுக்தா அணை பகுதியில் மர்ம நபர்கள் பகல் மற்றும் இரவு நேரங்களில் லாரிகளில் கிராவல் மண்ணை கடத்தி செல்கின்றனர். அணைபகுதியில் இருந்து அகரக்கோட்டாலம் கிராம வழியாக கடத்தி செல்வதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் இரவு நேரங்களில் கிராமம் வழியாக லாரிகள் செல்லும்போது உண்டாகும் சத்தத்தால் பொதுமக்கள் நிம்மதியாக தூங்க முடியாமல் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும் மண் கடத்தலை தட்டிக்கேட்கும் நபர்களை மர்ம நபர்கள் கொலை செய்து விடுவதாக மிரட்டி வருகின்றனர். இது குறித்து காவல் மற்றும் வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மணிமுக்தா அணையில் இருந்து கிராவல் மண் கடத்தலை தடுத்து நிறுத்த மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com