கல்விப் பெருமையைச் சொல்லும் அறிவுச் சிலையைத் திறந்து வைத்ததில் பெருமகிழ்ச்சி - மு.க.ஸ்டாலின்

மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள கற்றனைத் தூறும் அறிவுச் சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
கல்விப் பெருமையைச் சொல்லும் அறிவுச் சிலையைத் திறந்து வைத்ததில் பெருமகிழ்ச்சி - மு.க.ஸ்டாலின்
Published on

சென்னை,

பள்ளிக்கல்வித்துறை சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் 1.43 கோடி செலவில் கற்றனைத் தூறும் அறிவுச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

இந்த நிலையில் அறிவுச் சிலையைத் திறந்து வைத்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

Also Read
மெரினா கடற்கரையில் கல்விச் சிலை: மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
கல்விப் பெருமையைச் சொல்லும் அறிவுச் சிலையைத் திறந்து வைத்ததில் பெருமகிழ்ச்சி - மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டின் அடையாளங்களைச் சொல்லும் மெரினாவில் கல்வியின் பெருமையைச் சொல்லும் “கற்றனைத் தூறும் அறிவுச் சிலை”!

குழந்தைகள் - மாணவர்கள் - இளைஞர்கள் - சுற்றுலாப் பயணிகள் கூடும் தமிழர் கடற்கரையான மெரினா நெடுக, உழைப்பாளர் சிலை - விடுதலை வீரர்கள் சிலைகள் - தமிழ் வளர்த்த ஆன்றோர் சிலைகள் உள்ளிட்ட சிலைகளுடன், தமிழ்நாட்டின் கல்விப் பெருமையைச் சொல்லும், “கற்றனைத் தூறும் அறிவுச் சிலை”யைத் திறந்து வைத்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

Also Read
செல்போன் பார்த்ததை கண்டித்த பெற்றோர்... 12-ம் வகுப்பு மாணவர் எடுத்த விபரீத முடிவு
கல்விப் பெருமையைச் சொல்லும் அறிவுச் சிலையைத் திறந்து வைத்ததில் பெருமகிழ்ச்சி - மு.க.ஸ்டாலின்

தமிழர்கள் கல்வியை இறுகப்பற்றிக் கொண்டால் போதும், ஒருபோதும் நாம் வீழ மாட்டோம்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com