முத்திரை பதிக்கும் முத்தான திட்டம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
முத்திரை பதிக்கும் முத்தான திட்டம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
Published on

சென்னை,

முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. அரசின் முன்னெடுப்பு திட்டங்களான 'முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள்' என்ற பெயரில் ஏற்கனவே இது போன்ற கூட்டம் 5 முறை நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் மீண்டும் 6-வது ஆய்வு கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டத்தில், அமைச்சர்கள் கே.என்.நேரு, சாத்தூர் ராமச்சந்திரன், முத்துச்சாமி, தா.மோ.அன்பரசன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இவர்களுடன் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா, அரசுத்துறை முதன்மைச் செயலாளர்கள், துறை வாரியான உயர் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலைப்பாடுகள், தமிழக அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் செயல்பாடுகள், தற்போதைய நிலை, தாமதத்திற்கான காரணங்கள் குறித்து முதல்-அமைச்சர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com