பசுமை வழிச் சாலை: நிலம், மரம் என ஒவ்வொன்றுக்கும் இழப்பீடு வழங்கப்படும்-ஆட்சியர் ரோகிணி

பசுமை வழிச் சாலை அமைக்கும் விவகாரம்: "நிலம், மரம் என ஒவ்வொன்றுக்கும் இழப்பீடு வழங்கப்படும்" என மாவட்ட ஆட்சியர் ரோகிணி கூறினார். #Rohini
பசுமை வழிச் சாலை: நிலம், மரம் என ஒவ்வொன்றுக்கும் இழப்பீடு வழங்கப்படும்-ஆட்சியர் ரோகிணி
Published on

சென்னை

சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

விவசாயிகளின் நிலத்திற்கு மட்டுமின்றி அவர்களின் கிணறு, மாட்டுக் கொட்டகை போன்றவைகளுக்கும் உரிய இழப்பீடு வழங்கப்படும். நிலம் எந்த பகுதியில் உள்ளதோ அதற்கு ஏற்றார் போல 3 மடங்கு இழப்பீடு வழங்க உள்ளதாகவும், இதற்காக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

தென்னை, பாக்கு உள்ளிட்ட மரங்களுக்கும் மதிப்பீடு செய்யப்பட்டு அதற்கு ஏற்றார் போல இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் ரோகிணி தெரிவித்தார்.

பொதுமக்களுக்கான சாலையை அமைக்க கருத்து கேட்பு கூட்டம் தேவையில்லை; 100% மக்களுக்கு ஏற்றார்போல் 8 வழிச்சாலை அனைத்து வசதிகளுடன் இருக்கும் என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com