சாகித்ய அகாடமி விருதுபெறும் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து

சாகித்ய அகாடமி விருதுபெறும் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சாகித்ய அகாடமி விருதுபெறும் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து
Published on

சென்னை,

30 ஆண்டுகளாக தமிழ் எழுத்துலகில் பணியாற்றி வரும் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் விருதுநகரின் மல்லாங்கிணறை பூர்வீகமாக கொண்டவர். சென்னையில் தற்பொழுது வசித்து வருகிறார். கடந்த 1984-ம் ஆண்டில் இருந்து சிறுகதை, நாவல் எழுதி வருகிறார்.

இந்நிலையில் சஞ்சாரம் என்ற நாவலுக்காக எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு இலக்கியத்திற்கு வழங்கப்படும் உயரிய விருதான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு தமிழக முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வான எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு மக்கள் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மேன்மேலும் இது போன்ற பலவிருதுகளை அவர் பெற வேண்டும். எளிய நடையில் பாமரர்களும் புரிந்துகொள்ளும் வகையில் பல சிறுகதைகள், நாவல்களை படைத்தவர். எஸ்.ராமகிருஷ்ணன் தன்னை முழுமையாக அர்ப்பணித்து தமிழ் எழுத்துக்களில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com