ரேஷன்கார்டுதாரர்கள் குறைதீர்க்கும் முகாம்

நாமக்கல் மாவட்டம் முழுவதும் ரேஷன்கார்டுதாரர்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.
ரேஷன்கார்டுதாரர்கள் குறைதீர்க்கும் முகாம்
Published on

நாமக்கல் மாவட்டத்தில் பொது வினியோக திட்டத்தின் மூலம் ரேஷன்கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் செல்போன் எண் பதிவு மற்றும் பொது வினியோக கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகார்களை தெரிவிக்கவும், குடும்ப அட்டையில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டும் ரேஷன்கார்டுதாரர்கள் குறைதீர்க்கும் முகாம் நேற்று நாமக்கல், ராசிபுரம், மோகனூர், சேந்தமங்கலம், கொல்லிமலை, திருச்செங்கோடு, பரமத்தி வேலூர் மற்றும் குமாரபாளையம் வட்ட வழங்கல் அலுவலகங்களில் அந்தந்த வட்ட வழங்கல் அலுவலர்கள் தலைமையில் நடைபெற்றது.

நாமக்கல் தாலுகா அலுவலகத்தில் வட்ட வழங்கல் அலுவலர் சின்னதம்பி தலைமையில் நடந்த குறைதீர்க்கும் முகாமில் 50 மனுக்கள் பெறப்பட்டன. இதேபோல் கொல்லிமலை-5, குமாரபாளையம்-13, மோகனூர்-44, பரமத்திவேலூர்-11, ராசிபுரம்-25, சேந்தமங்கலம்-14, திருச்செங்கோடு-19 என மாவட்டம் முழுவதும் 181 மனுக்கள் பெறப்பட்டன. இவை அனைத்திற்கும் தீர்வு காணப்பட்டதாக மாவட்ட வழங்கல் அலுவலர் ரமேஷ் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com