8 இடங்களில் சிறப்பு குறைதீர்க்கும் முகாம்

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 8 இடங்களில் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.
8 இடங்களில் சிறப்பு குறைதீர்க்கும் முகாம்
Published on

நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் பொது வினியோக திட்டத்தின் கீழ் நாமக்கல், ராசிபுரம், மோகனூர், சேந்தமங்கலம், கொல்லிமலை, திருச்செங்கோடு, பரமத்திவேலூர் மற்றும் குமாரபாளையத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகங்களில் பொதுமக்கள் சிறப்பு குறைதீர்க்கும் முகாம்கள் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. காலை 10 மணியளவில் தொடங்கும் முகாம்களுக்கு அந்தந்த வட்ட வழங்கல் அலுவலர்கள் தலைமை தாங்க உள்ளனர்.

இதில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், புதிய ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்தல், குடும்ப அட்டையில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்தல் என்பது உள்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்களில் பங்கேற்று பொது விநியோகத் திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019 குறித்த தங்கள் குறைகளை தீர்வு செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com