மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 510 மனுக்கள் பெறப்பட்டன

தஞ்சையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 510 மனுக்கள் பெறப்பட்டன.
மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 510 மனுக்கள் பெறப்பட்டன
Published on

தஞ்சையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 510 மனுக்கள் பெறப்பட்டன.

குறைதீர்க்கும் கூட்டம்

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்விக்கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 510 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி, உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளவும், மனு மீதான நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்கவும் கலெக்டர் அறிவுறுத்தினார்.

வீட்டுமனை பட்டா

அதைத்தொடர்ந்து சமூக பாதுகாப்பு திட்டத்தின் மூலம் முதல்-அமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தற்காலிக இயலாமை உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை ஒருவருக்கும், விலையில்லா வீட்டுமனைப்பட்டாவிற்கான ஆணையை ஒருவருக்கும் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார். தொடர்ந்து அவர், மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் நெகிழி மாசில்லா தஞ்சை மாவட்டம் என்ற தலைப்பில் மாவட்ட சுற்றுச்சூழல் திட்ட செயலாக்க புத்தகத்தை வெளியிட்டார்.

கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தவவளவன், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ரவிக்குமார் மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com