

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் திங்கட்கிழமை தோறும் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று குறைதீர்க்கும் கூட்டம் கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா தலைமையில் நடைபெற்றது. இதில் இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்விக்கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான 356 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்றுக்கொண்ட கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா, அதன் மீது விசாரணை நடத்தி அதன் விவரத்தை சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதில் சமூக பாதுகாப்பு திட்ட சப்-கலெக்டர் சாலைதவவளவன் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.