கரூரில் 11-ந் தேதி பொது வினியோக திட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

பொது வினியோக திட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கரூரில் 11-ந் தேதி நடக்கிறது.
கரூரில் 11-ந் தேதி பொது வினியோக திட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
Published on

கரூர் மாவட்டத்தில் பொது வினியோக திட்டத்தில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், பெயர் திருத்தம், புதிய குடும்ப அட்டை கோருதல், கைபேசி எண் பதிவு மற்றும் பொது வினியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்த புகார்கள், தனிநபர் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார்களை பொது வினியோக திட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 11-ந் தேதி காலை 10 மணி முதல் கரூர், அரவக்குறிச்சி, மண்மங்கலம், புகழூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம் மற்றும் கடவூர் வட்ட வழங்கல் அலுவலகங்களில் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் நடைபெறுகிறது. எனவே குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது குறைகளை தீர்வு செய்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com