செந்துறையில் இன்று எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் செந்துறையில் இன்று நடக்கிறது.
செந்துறையில் இன்று எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்
Published on

அரியலூர் மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பாக எரிவாயு (கியாஸ் சிலிண்டர்) நுகர்வோர் குறைதீர் கூட்டம் செந்துறை தாசில்தார் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் இன்று (வியாழக்கிழமை) மதியம் 12.30 மணியளவில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் அனைத்து எண்ணெய் நிறுவனங்களின் பிரதிநிதிகள், எரிவாயு முகவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். எரிவாயு நுகர்வோர்கள், சமையல் எரிவாயு தொடர்பான குறைகள் இருப்பின் இந்த குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது புகார்களையும், ஆலோசனைகளையும் தெரிவிக்கலாம் என்று அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com