மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

மயிலாடுதுறையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
Published on

மயிலாடுதுறை;

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மகாபாரதி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 296 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களை மாவட்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மேலும் மனுக்கள் மீது, எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விவரத்தை மனுதாரர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார்.கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜகணேசன், தனித்துணை கலெக்டர் சமூகபாதுகாப்புத் திட்டம் கண்மணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com