குட்கா விற்பனை செய்த மளிகை கடைக்காரர் கைது

குட்கா விற்பனை செய்த மளிகை கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.
குட்கா விற்பனை செய்த மளிகை கடைக்காரர் கைது
Published on

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் கிராமத்தில் சங்கர் (வயது 45) என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் பாடலூர் போலீசார் சோதனை செய்தனர். அப்போது 4 கிலோ குட்காவை கடையில் இருந்து பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சங்கரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com