

திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் நகராட்சியில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த சிறப்பு துப்புரவு பணியில் சிறப்பாக செயல்பட்ட 90 தூய்மை பணியாளர்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு நகர மன்ற தலைவர் டி.என்.முருகன் தலைமை தாங்கி தூய்மை பணியாளர்களுக்கு மளிகை பொருட்களை வழங்கி பாராட்டி பேசினார். நிகழ்ச்சியில் ஆணையாளர் கீதா, துணைத் தலைவர் உமா மகேஸ்வரி குணா மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.