மளிகை கடைக்காரர் விஷம் குடித்து தற்கொலை

நித்திரவிளை அருகே மளிகை கடைக்காரர் விஷம் குடித்து தற்கொலை
மளிகை கடைக்காரர் விஷம் குடித்து தற்கொலை
Published on

கொல்லங்கோடு, 

நித்திரவிளை அருகே உள்ள வைக்கல்லூரை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 55), மளிகை கடை நடத்தி வருகிறார். இவருக்கு சந்திரலேகா என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். விஜயகுமாருக்கு மது பழக்கம் உண்டு. மேலும் நோயால் பாதிக்கப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை மனைவி மற்றும் உறவினர்கள் மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின்பேரில் நித்திரவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com