

பேட்டை:
மானூர் யூனியனுக்கு உட்பட்ட கட்டாரங்குளம் பஞ்சாயத்து அலுவலகத்திற்கு ரூ.42 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா, மானூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் அன்பழகன் தலைமையில் நடந்தது. நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் மங்கையர்கரசி, பொறியாளர் சுகந்தி, மாவட்ட பிரதிநிதிகள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.