வேர்க்கடலை பயிர்கள் நீரில் மூழ்கியதால்விவசாயிகள் கவலை

தொடர் மழை காரணமாக வேர்க்கடலை பயிர் செய்துள்ள வயல்களில் மழைநீர் தேங்கி செடிகள் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
வேர்க்கடலை பயிர்கள் நீரில் மூழ்கியதால்விவசாயிகள் கவலை
Published on

வள்ளிமலை

தொடர் மழை காரணமாக வேர்க்கடலை பயிர் செய்துள்ள வயல்களில் மழைநீர் தேங்கி செடிகள் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

பலத்தமழை

ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் விடிய விடிய பலத்த மழை பெய்து வருகின்றது. மாவட்ட மற்றும் மாநில எல்லை பகுதியான திருவலம், வள்ளிமலை, பொன்னை ஆகிய பகுதிகளில் பகல் நேரங்களில் வெயில் சுட்டெரிக்கிறது. மாலையில் மழை பெய்ய தொடங்கினால் இரவு முழுவதும் கனமழை பெய்கிறது.

வள்ளிமலை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள விவசாயிகள் வேர்க்கடலை பயிர் செய்து உள்ளனர். இவை இப்போது அறுவடைக்கு தயாராக உள்ளது.

அழுகும் நிலை

ஆனால் இரவு முழுவதும் பெய்யும் பலத்த மழையால் வேர்க்கடலை பயிர் செய்துள்ள நிலத்தில் மழை நீர் குளம் போல் தேங்கி நிற்பதால் வேர்க்கடலை செடிகள் பல இடங்களில் நீரில் மூழ்கி அழுகிப் போய் வருகின்றன.

விளைந்த பயிரை அறுவடை செய்ய முடியாமல் கஷ்டப்படுவதாகவும் மகசூல் பாதிப்பால் தங்களுக்கு கடுமையான இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் மன வேதனையுடன் கூறுகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com