குரூப்-1, 1பி முதன்மைத் தேர்வை கருப்பு மை பேனாவில் மட்டுமே எழுத வேண்டும் - டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

கருப்பு மை பேனாக்களைத் தவிர மற்ற பேனாக்களை உபயோகித்தால் விடைத்தாள் செல்லாததாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

சென்னை,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

குரூப்-1, 1பி பணிகளில் வரும் காலிப் பணியிடங்களுக்கான முதன்மைத் தேர்வில் தேர்வர்கள் கருப்பு மை பேனாவை (black ink pen) (மையூற்று பேனா அல்லது பந்துமுனை பேனா அல்லது ஜெல்பேனா) மட்டுமே உபயோகிக்க வேண்டும்.

தேர்வர்கள் விடைப்புத்தகம் முழுவதும், அதாவது தேர்வு எண்ணை எழுதுதல், முதல் பக்கத்தில் கையொப்பமிடுதல், விடை எழுதுதல், படம் வரைதல், அடிக்கோடிடுதல், மேற்கோள்காட்டுதல், விடை புத்தகத்தில் பயன்படுத்தாத இடங்களை / தேவையான எண்ணிக்கைக்கு அதிகமான விடைகளை அடித்தல், போன்றவற்றுக்கு ஒரேவகையான கருப்பு மை பேனாவை (மையூற்று பேனா அல்லது பந்துமுனை பேனா அல்லது ஜெல்பேனா) மட்டுமே உபயோகிக்க வேண்டும்.

தேர்வர்கள் மேற்கூறிய தேவைகளுக்கு ஒரேவகை கொண்ட கருப்பு மை பேனாக்களை போதுமான எண்ணிக்கையில் வைத்திருக்க வேண்டும். தேர்வர்கள் கருப்பு மை பேனாக்களைத் தவிர மற்ற பேனாக்களை உபயோகித்தால் அவர்களது விடைத்தாள் செல்லாததாக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com