குரூப் 1 தேர்வு - அதிகாரப்பூர்வ விடைகள் வெளியீடு

நவ.19ல் நடைபெற்ற குரூப் 1 தேர்வுக்கான அதிகாரப்பூர்வ விடைகளை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
குரூப் 1 தேர்வு - அதிகாரப்பூர்வ விடைகள் வெளியீடு
Published on

சென்னை,

துணை கலெக்டர், வணிக வரி உதவி கமிஷனர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, ஊரக மேம்பாட்டுத்துறை உதவி இயக்குனர் ஆகிய குரூப்-1 பதவிகளில் உள்ள 92 காலி இடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டு இருந்தது. முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அந்த வகையில் முதல்நிலைத் தேர்வு கடந்த நவம்பர் 19ல் தமிழகம் முழுவதும் நடந்தது . . சென்னை, மதுரை,கோவை, திருச்சி உள்பட 38 மையங்களில் தேர்வு நடைபெறுகிறதுகாலை 9.30 முதல் பிற்பகல் 12.30 மணி வரையில் இந்த தேர்வு நடந்தது.

இந்த தேர்வை எழுதுவதற்காக 3,22,414 பேர் விண்ணபித்திருந்த நிலையில். 59,23% பேர் மட்டுமே, அதாவது 1,90,957 பேர் மட்டுமே குரூப் 1 தேர்வெழுத வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நவ.19ல் நடைபெற்ற குரூப் 1 தேர்வுக்கான அதிகாரப்பூர்வ விடைகளை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.4 கேள்விகளுக்கான விடைகள் தவறாக தரப்பட்டுள்ளதாக தேர்வர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com