தமிழகத்தில் குரூப்-1 முதல்நிலைத் தேர்வு தொடங்கியது

சென்னை, மதுரை,கோவை, திருச்சி உள்பட 38 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது
தமிழகத்தில் குரூப்-1 முதல்நிலைத் தேர்வு தொடங்கியது
Published on

சென்னை,

துணை கலெக்டர், வணிக வரி உதவி கமிஷனர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, ஊரக மேம்பாட்டுத்துறை உதவி இயக்குனர் ஆகிய குரூப்-1 பதவிகளில் உள்ள 92 காலி இடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டு இருந்தது. முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

அந்த வகையில் முதல்நிலைத் தேர்வு இன்று (சனிக்கிழமை) தமிழகம் முழுவதும் நடைபெறுகிறதுநடைபெறுகிறது. இந்த தேர்வை எழுதுவதற்காக 3 லட்சத்து 22 ஆயிரத்து 416 பேர் விண்ணப்பித்து இருந்த நிலையில், அதில் 2 பேரின் விண்ணப்பங்கள் மட்டும் நிராகரிக்கப்பட்டு, 3 லட்சத்து 22 ஆயிரத்து 414 பேர் தேர்வை எழுத தகுதியுள்ளவர்களாக டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் குரூப்-1 முதல்நிலைத் தேர்வு தொடங்கியுள்ளது. பிற்பகல் 12.30 மணி வரையில் இந்த தேர்வு நடக்கிறது. சென்னை, மதுரை,கோவை, திருச்சி உள்பட 38 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com