குரூப்-2, 2ஏ முதன்மைத் தேர்வு கட்டணம் செலுத்த மறுவாய்ப்பு - டி.என்.பி.எஸ்.சி. தகவல்

ஐகோர்ட்டு உத்தரவுப்படி முதன்மைத் தேர்வு கட்டணம் செலுத்த மறுவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
குரூப்-2, 2ஏ முதன்மைத் தேர்வு கட்டணம் செலுத்த மறுவாய்ப்பு - டி.என்.பி.எஸ்.சி. தகவல்
Published on

சென்னை,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் 2025-ம் ஆண்டு ஜூலை 15-ந்தேதி அறிவிப்பின்படி, குரூப்-2, 2ஏ பணிகளில் அடங்கியுள்ள பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு 2025-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ந்தேதி நடைபெற்றது. குரூப்-2ஏ முதன்மைத் தேர்வு 15-ந்தேதி காலையிலும், குரூப்-2, 2ஏ தமிழ் தகுதித்தாள் தேர்வு அன்றைய தினம் பிற்பகலிலும் நடைபெறுகிறது.

சென்னை ஐகோர்ட்டு கடந்த 25-ந்தேதி ஆணையின்படி, முதன்மைத் தேர்வு கட்டணம் செலுத்தாத சில தேர்வர்களுக்கு மறுவாய்ப்பு அடுத்த மாதம் (மார்ச்) 5-ந்தேதி இரவு 11.59 மணி வரை வழங்கப்படுகிறது. இதுகுறித்து தனிப்பட்ட முறையில் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலமாக தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே அவர்களுடைய ஓ.டி.ஆர். மூலமாக தேர்வு கட்டணம் மேற்குறிப்பிட்ட காலத்துக்குள் செலுத்துமாறு தெரிவிக்கப்படுகிறது.

மேற்கண்ட தகவல் டி.என்.பி.எஸ். சி. தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெங்கடபிரியா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது ஒரு கூடுதல் அவகாசம் என்பதால், கடைசி நேர தொழில்நுட்பக் கோளாறுகளைத் தவிர்க்க முன்கூட்டியே பணிகளை முடிப்பது நல்லது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com