தமிழகம் முழுவதும் நாளை குரூப்-2 தேர்வு நடக்கிறது

தமிழகம் முழுவதும் 4012 மையங்களில் நாளை குரூப் 2 தேர்வு நடக்கிறது.
தமிழகம் முழுவதும் நாளை குரூப்-2 தேர்வு நடக்கிறது
Published on

சென்னை,

தமிழகத்தில் குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ பிரிவில் காலியாக உள்ள 5 ஆயிரத்து 400 பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தது.

அதன்படி, தமிழகம் முழுவதும் குரூப்-2 தேர்வு 21ம் தேதி நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. தமிழகம் முழுவதும் சுமார் 11 லட்சத்து 78 ஆயிரம் பேர் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். காலை 9.30 மணிக்கு தொடங்கும் தேர்வு பிற்பகல் முதல் 12.30 மணி வரை என 3 மணி நேரம் நடக்கிறது.

தேர்வுக்காக மாநிலம் முழுவதும் 38 மாவட்டங்களில் 117 இடங்களில் 4012 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு நடைபெறும் அனைத்து இடங்களிலும் தேர்வு எழுதுபவர்கள் சிரமமின்றி சென்று வரும் வகையில் சிறப்பு பேருந்துகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com