குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு - டி.என்.பி.எஸ்.சி

தமிழகத்தில் குரூப் 4 போட்டித் தேர்வு வரும் 24-ம் தேதி நடைபெற உள்ளது.
குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு - டி.என்.பி.எஸ்.சி
Published on

சென்னை,

தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவையான ஊழியர்களை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் அரசு தேர்வு செய்து வருகிறது. திறமையான ஊழியர்களை கண்டறிய பல்வேறு போட்டித்தேர்வுகள் மற்றும் நேர்காணல் ஆகியவற்றை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகின்றனர். அரசு பணிகளின் அடிப்படையில் இந்த தேர்வுகள் குரூப் 1, குரூப் 2, குரூப் 3 மற்றும் குரூப் 4 மற்றும் குரூப் 5,6,7,8 ஆகிய தேர்வுகள் நடத்தப்படுகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர்(வி.ஏ.ஓ.), தட்டச்சர், இளநிலை உதவியாளர், நில அளவையாளர் உள்ளிட்ட 7 ஆயிரத்து 382 அரசு பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை இன்று டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டு உள்ளது.

விண்ணப்பதாரர்களின் ஹால்டிக்கெட் www.tnpsc.gov.in , www.tnpscexams.in என்ற தேர்வாணையத்தின் இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பதார்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் மூலம் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய முடியும் என தேர்வாணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com