ஜி.எஸ்.டி. 5 சதவீதம் சரிவு: தி.மு.க.வின் அரைவேக்காட்டு பிரச்சாரம் - த.வெ.க. கடும் தாக்கு

பொய் பிரச்சாரத்தால் உண்மையை வெல்ல முடியாது என்று த.வெ.க. தெரிவித்துள்ளது.
ஜி.எஸ்.டி. 5 சதவீதம் சரிவு: தி.மு.க.வின் அரைவேக்காட்டு பிரச்சாரம் - த.வெ.க.  கடும் தாக்கு
Published on: 

சென்னை,

அரசு நிர்வாக தோல்வி என்று அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு கூப்பாடு போடுபவர்களின் நோக்கம் அம்பலமாகி உள்ளதாக தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதித்துறை செயலாளர்

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

“GST 5 சதவீதம் சரிவு… தமிழக அரசின் நிர்வாகத் தோல்வி” என்று கடந்த சில நாட்களாக தி.மு.க.வினரின் அரைவேக்காட்டு பிரச்சாரத்தின் உண்மை முகம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

Gross GST-ஐ மட்டும் காட்டி மக்களை ஏமாற்ற முயன்றவர்களை, அதிகாரப்பூர்வத் தரவு நறுக்கென்று குட்டியுள்ளது. தமிழ்நாட்டிற்கு உண்மையில் கிடைக்கும் Post-Settlement GST வருவாய் 16.1 சதவீதம் உயர்ந்துள்ளது என தமிழ்நாடு நிதித்துறை செயலாளரே தெளிவுபடுத்தியுள்ளார்.

அரசியல் காழ்ப்புணர்ச்சி

அப்படியிருக்க, “5 சதவீதம் குறைந்துவிட்டது” என்று மட்டும் கூறி பொருளாதாரம் வீழ்ச்சி, அரசு நிர்வாகத் தோல்வி என்று அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு கூப்பாடு போடுபவர்களின் நோக்கம் அம்பலமாகியுள்ளது.

GST வருவாய்

உற்பத்தி மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு பொருட்களை விநியோகிக்கும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில், IGST Settlement உள்ளிட்ட பல்வேறு காரணிகள் Gross GST எண்ணிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, தமிழ்நாட்டின் உண்மையான GST வருவாய் நிலையை மதிப்பிடும்போது Post-Settlement GST தரவுக்கே முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

பொய் பிரச்சாரத்தால் உண்மையை வெல்ல முடியாது !

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com