தொகுதி மேம்பாட்டு நிதிக்கான ஜிஎஸ்டி நிதியை விடுவிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

தொகுதி மேம்பாட்டு நிதிக்கு உண்டான ஜிஎஸ்டி நிதியை கூட விடுவிப்பதற்கு ஏன் இவ்வளவு தாமதம் என எடப்பாடி பழனிசாமி கேள்வியெழுப்பியுள்ளார்.
தொகுதி மேம்பாட்டு நிதிக்கான ஜிஎஸ்டி நிதியை விடுவிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
Published on

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு உண்டான ஜிஎஸ்டி வரியை அரசே செலுத்தும் என்று அரசாணை எண். 23, 15.9.2025 அன்று வெளியிடப்பட்ட பின்னும், இதுவரை ஜிஎஸ்டி வரிக்கான நிதியை தமிழக அரசு விடுவிக்கவில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனால் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் மேற்கொள்ளப்பட்டு, முடிவுற்ற பணிகளுக்கு உண்டான நிதியை மாவட்ட ஆட்சியர்கள் விடுவிக்காமல் சிரமப்படுகின்றனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தொகுதி மேம்பாட்டு நிதிக்கு உண்டான ஜிஎஸ்டி நிதியை கூட விடுவிப்பதற்கு ஏன் இவ்வளவு தாமதம்?

எனவே, உடனடியாக தொகுதி மேம்பாட்டு நிதிக்கு உண்டான ஜிஎஸ்டி நிதியை உடனடியாக விடுவிக்கும்படி முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com